சீனாவில் ஆற்றில் மூழ்கிய கப்பல் நேராகத் தூக்கி நிறுத்தப்பட்டது; 82 பேர் பலி

சீனாவில் ஆற்றில் மூழ்கிய கப்பல் நேராகத் தூக்கி நிறுத்தப்பட்டது; 82 பேர் பலி

சீனாவில் ஆற்றில் மூழ்கிய கப்பல் நேராகத் தூக்கி நிறுத்தப்பட்டது; 82 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2015 | 2:02 pm

சீனாவில் ஆற்றில் மூழ்கிய கப்பலை மீட்புகுழுவினர் நேராகத் தூக்கி நிறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதற்கிடையே பலியானோர்கள் 82 பேரது உடல்கள் மீட்கப்பட்டது.

சீனாவில் கடந்த 1 ஆம் திகதி 456 பேருடன் சென்ற ஈஸ்டர்ன் ஸ்டார் என்னும் பயணிகள் கப்பல், சூறாவளியில் சிக்கி யாங்ட்ஸே ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் கப்பல் தலைவன், பொறியிலாளர் உள்ளிட்ட 14 பேர் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 5 ஆவது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கி தேடும் ஆற்றல் வாய்ந்த 200 இற்கும் மேற்பட்ட வீரர்கள், தண்ணீருக்கு அடியில் பயணிகளைத் தேடினர்.

சீன அதிபர் ஜின்பிங், கப்பல் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு இயலக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மீட்புப்படையினருக்கு நேற்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே தலைகீழாக கவிழ்ந்து கிடந்த கப்பலை மீட்புகுழுவினர் ஒருபுறமாக தூக்கிநிறுத்திஉள்ளனர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கப்பல் கவிழ்ந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரையில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. 82 உடல்களும் மீட்கப்பட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போயுள்ள இன்னும் 300 இற்கும் அதிகமான பயணிகளை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்