குருநாகல் நகர சபைத் தலைவரின் வீட்டின் மீது தாக்குதல்

குருநாகல் நகர சபைத் தலைவரின் வீட்டின் மீது தாக்குதல்

குருநாகல் நகர சபைத் தலைவரின் வீட்டின் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2015 | 11:35 am

குருநாகல் நகர சபைத் தலைவர் அனுராத காமினி பெரமுணவின் வீட்டின் மீது நேற்றிரவு சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் நேற்றிரவு 12 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நால்வர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தாக்குதலில் குருநாகல் நகர சபைத் தலைவரினது வீட்டிற்கும், வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்