ஒற்றுமைப் பயணத்தின் 29ஆவது நாள்: வெலிகம நகரில் நிறைவு

ஒற்றுமைப் பயணத்தின் 29ஆவது நாள்: வெலிகம நகரில் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 7:30 pm

தேசிய ஒற்றுமையின் பலத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி, சகவாழ்வின் தகவலுடன் பயணிக்கும் ஒற்றுமைப் பயணத்தின் 29ஆவது நாள் இன்றாகும்.

இன்றைய பயணம் வெலிகம நகரில் நிறைவு பெற்றது.

மக்களின் மனங்களை ஒன்றிணைக்கும் வகையில் கிராமங்கள் தோறும் பயணிக்கும் தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம், கம்புறுப்பிட்டியில் இன்று ஆரம்பமான சந்தர்ப்பத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர்களான ஏஷினி முதலிகே மற்றும் அனுராத ஜயசிங்க உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரிகள், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

சகவாழ்விற்காக முன்னெடுக்கப்படும் ஒற்றுமைப் பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக கூடியிருந்த கம்புறுப்பிட்டி மக்கள் மத்தியில் இருந்த சிலர் இசைத்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

உலகைப் பார்க்கும் வரம் தமக்கு இல்லாத போதிலும், சமாதானத்துடன் கூடிய நாடொன்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் முயற்சியை முன்னெடுக்கும் ஒற்றுமைப் பயணத்துடன் மனப்பூர்வமாக மக்கள் இணைந்தனர்.

கம்புறுப்பிட்டி மக்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் ஒற்றுமைப் பயணம் மாத்தறை நோக்கிப் பயணித்தது.

மஹானாம பாலத்திற்கு அருகில் ஒற்றுமைப் பயணத்திற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்றதிகாரி மொஹான் பராரா உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரிகள் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாத்தறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டி.எல்.எல்.எ.ஜயசேகர உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

மாத்தறை பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஒற்றுமைப் பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வு பல அம்சங்களைக் கொண்டமைந்திருந்தது.

மாத்தறை ஊடகவியலாளர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் மாத்தறை கைத்தொழில் மற்றும் வணிகமன்ற உறுப்பினர்களும் சகவாழ்விற்கான தகவலுடன் பயணிக்கும் ஒற்றுமைப் பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

மாத்தறையின் நாமத்தைப் பதிவு செய்த ஒற்றுமைப் பயணம், இன்றைய பயண முடிவிடமான வெலிகம நகரை நோக்கி இன்று மாலை பயணத்தை ஆரம்பித்தது.

வீதியின் இருமருங்கிலும் வழமைபோல் கூடியிருந்த மக்களின் வாழ்த்துக்களுடன் வெலிகமயை ஒற்றுமைப் பயணம் அடைந்தது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஶ்ரீ லால் அஹங்கம உள்ளிட்ட நிறைவேற்றதிகாரிகளும் இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்தனர்.

30 ஆவது நாளான நாளை காலை 9 மணிக்கு காலி சமனல மைதானத்திற்கு அருகில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள ஒற்றுமைப் பயணம், பிற்பகல் 2 மணிக்கு அம்பலாங்கொடையைச் சென்றடையவுள்ளது.

 

 

11109017_915324048527854_4927263791782173077_n 11215510_915319741861618_4643237551049315657_n 11247510_915324118527847_8064584529536852659_n 11350521_915321228528136_6266175816011779539_n 11391464_915321675194758_341511132173252621_n 11391541_915324071861185_104481369776883604_n 11401470_915319545194971_3479324744991610941_n 11403439_915319955194930_6799116035774549246_n11406572_915323991861193_4233498468848517078_n 11407046_915319641861628_8197702867392518457_n 11412285_915324728527786_1405760219212207535_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்