ஒருவர் மற்றொருவர் மீது கொள்ளும் வெறுப்பு நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும் – ராஜித சேனாரத்ன

ஒருவர் மற்றொருவர் மீது கொள்ளும் வெறுப்பு நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும் – ராஜித சேனாரத்ன

ஒருவர் மற்றொருவர் மீது கொள்ளும் வெறுப்பு நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும் – ராஜித சேனாரத்ன

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2015 | 12:09 pm

ஒருவர் மற்றொருவர் மீது கொள்ளும் வெறுப்பு நாட்டை அழிவின் பாதையில் இட்டு செல்லும் என சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிந்த நான்கு வைத்தியர்கள் மற்றும் ஜெனீவா கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியில் வௌ்ளிப் பதக்கங்களை வென்ற இரண்டு வைத்தியர்களை பாராட்டும் நிகழ்வு சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

இவர் மேலும் தெரிவித்ததாவது கடின சூழ்நிலைகளின் கீழ் வளங்கள் இன்றி பணிபுரிந்து நாட்டிற்கு தேவையான துறைகளில் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றவர்களை சிலர் எதிர்க்கின்றனர். மற்றைய நாடுகளில் யாராவது கண்டுபிடிப்புகளை மேற்கொண்டால் பெருமளவான மக்கள் திரண்டு கண்டுபிடிப்பாளருக்கு உதவ முன்வருவர். அது தான் தேசிய ஒற்றுமை.

அத்துடன் எமது தேசியத்துவத்தில் யாராவது ஒருவர் ஏனையவருக்கு உதவி செய்தால் அவரை எதிர்ப்பதே வழமை. எமது நாட்டில் இனப்பிளவுகள் மற்றையவர் மீது வெறுப்பினை தோற்றுவித்து விடுகின்றது. இது எமது நாட்டினை சீர்குலைக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்