எரிபொருள் விலையை அதிகரிக்கும் எண்ணமில்லை – ஐ.ஓ.சி நிறுவனம்

எரிபொருள் விலையை அதிகரிக்கும் எண்ணமில்லை – ஐ.ஓ.சி நிறுவனம்

எரிபொருள் விலையை அதிகரிக்கும் எண்ணமில்லை – ஐ.ஓ.சி நிறுவனம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 8:32 pm

நட்டத்தில் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டாலும் விலையை அதிகரிக்கவோ விநியோகத்தை மட்டுப்படுத்தவோ திட்டம் இல்​லை என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைத் திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் உரிய விலை சூத்திரத்தை எதிர்பார்த்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுபோத் டக்வால் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் 17 வீதமான சந்தை வாய்ப்பை இலங்கையில் தக்கவைத்துக் கொண்டுள்ள ஐ.ஓ.சி நிறுவனம், தனது விநியோகத்தில் 50 வீதத்தைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுபோத் டக்வாலிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

அவர் தெரிவித்ததாவது;

[quote]கடந்த மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் விலைக்குறைப்பின் பின்னரும் கேள்வி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாங்கள் விநியோகத்தைக் குறைக்கவில்லை. கடந்த வருட விநியோகத்தை இந்த வருடமும் தக்கவைத்துக் கொள்வதே எமது நோக்கமாகும். ஆகவே, எவ்விதமான குழப்பமும் தேவையில்லை.[/quote]

என்றார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 66 ரூபாவும் ஒரு லீட்டர் டீசலுக்கு 17 ரூபாவும் வரி விதித்தமை மற்றும் உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தமை காரணமாக நட்டத்திலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்