இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 130 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 130 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 130 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2015 | 8:50 am

இராமேஸ்வரத்தில இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 130 கிலோகிராம் கஞ்சா தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இதுதொடர்பில் சென்னையைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கஞ்சா மூட்டைகள் வேனொன்றில் கொண்டுவரப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, பரமக்குடி அருகே கமுதக்குடி ரயில்வே கடவைக்கு அருகில் சோதனையிட்டபோதே, நேற்று மாலை கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மிளகாய் மூட்டைகளுக்கு கீழே, மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்தபோது, கஞ்சா கைப்பற்றப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 07 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கும் அதிகமென மதிப்படப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடுத்துவைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்