அவன்கார்ட் நிறுவனத்தின் கோரிக்கைக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எதிர்ப்பு

அவன்கார்ட் நிறுவனத்தின் கோரிக்கைக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எதிர்ப்பு

அவன்கார்ட் நிறுவனத்தின் கோரிக்கைக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எதிர்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 4:50 pm

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைக்குப் பதிலாக வேறொரு கப்பலைப் பயன்படுத்துவதற்கு அவன்கார்ட் நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலின் காப்புறுதி கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்றமையினால், காலி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகள் காலி பிரதம நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவன்கார்ட் மெரிடைம் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2012ஆம் ஆண்டு முதல் இன்று வரையான அனைத்து கொடுக்கல் வாங்கல் அறிக்கை மற்றும் நிர்வாக அறிக்கை ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும் என அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்