அரசியலமைப்பு சபைக்கு பி.பி.தேவராஜாவை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆறுமுகன் தொண்டமான் பரிந்துரை

அரசியலமைப்பு சபைக்கு பி.பி.தேவராஜாவை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆறுமுகன் தொண்டமான் பரிந்துரை

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 7:44 pm

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் நேற்று (04) நடைபெற்றுள்ளது.

அரசியலமைப்பு சபைக்கு இந்திய வம்சாவளி மக்கள் சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.

இதன்பிரகாரம், அரசியலமைப்பு சபைக்கு முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பி.பி.தேவராஜாவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்