FIFA அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேரை சர்வதேச அளவில் தேடப்படுபவர்களாக இண்டர்போல் அறிவிப்பு

FIFA அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேரை சர்வதேச அளவில் தேடப்படுபவர்களாக இண்டர்போல் அறிவிப்பு

FIFA அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேரை சர்வதேச அளவில் தேடப்படுபவர்களாக இண்டர்போல் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2015 | 5:02 pm

இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள FIFA அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக இண்டர்போல் அறிவித்துள்ளது.

இந்த அறுவரில் பெருநிறுவன அதிகாரிகள் நால்வரும் FIFA வின் முன்னாள் அதிகாரிகள் இருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு FIFA அதிகாரிகளில் முன்னாள் துணைத் தலைவர் ஜேக் வோர்னரும் உள்ளார்.

இந்த அறுவர் மீதும் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள், ஏற்கனவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இண்டர்போல் மூலம் விடுக்கப்பட்டுள்ள ‘சிவப்பு அறிக்கையானது’ (Red Notice) குறித்த நபர்களைக் கைது செய்து நாடு கடத்தக் கோருவதாக அமையும்.

எனினும், அதில் பெயரிடப்பட்டுள்ள யாரையும் தடுத்து வைக்கும்படி எந்த நாட்டையும் இண்டர்போல் நிர்பந்திக்க முடியாது.

தகவல் – பிபிசி


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்