முந்தல் பகுதியில் கிராம உத்தியோகத்தர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

முந்தல் பகுதியில் கிராம உத்தியோகத்தர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

முந்தல் பகுதியில் கிராம உத்தியோகத்தர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2015 | 8:32 am

முந்தல் பகுதியில் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் பட்டாணி ராசிக் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து நேற்று (03) நாடு திரும்பியபோது சந்தேகபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

33 வயதான சந்தேகநபர் வாழைச்சேனை காவத்தமுனை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகபரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

குறித்த ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி பொலன்னறுவையில் அடையாளம் தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்டிருந்தார்.

சந்தேகபர்களால் கோரப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபா கப்பம் செலுத்தப்படாமையால் குறித்த ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவைப்பட்டிருந்த ஒருவரே நேற்று நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்