மாங்குளத்தில் விபத்து: சாரதியும் பெண் ஒருவரும் உயிரிழப்பு

மாங்குளத்தில் விபத்து: சாரதியும் பெண் ஒருவரும் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 5:08 pm

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிழவன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சொகுசு ரக பஸ், நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 19 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பஸ்சின் சாரதியும், பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்