போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2015 | 11:30 am

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத் தாள்களை வைத்திருந்த 02 சந்தேகநபர்கள் ராஜகிரியவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போலியாக அச்சிடப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக சந்தேகநபர்கள் கொண்டுவந்திருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்