பொலன்னறுவை – கொழும்பு வீதியில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி

பொலன்னறுவை – கொழும்பு வீதியில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 8:35 pm

பொலன்னறுவை – கொழும்பு பிரதான வீதியில் பராக்கிரம சமுத்திரத்தில் முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றியுள்ளது.

முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பக்கமூன பகுதியில் இருந்து சோமாவதி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து, பொலன்னறுவை தமன்கடுவ பிரதேச செயலகத்தின் தீயணைப்பு வாகனத்தைப் பயன்படுத்தி தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்