பொசன் பூரணை தினத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

பொசன் பூரணை தினத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

பொசன் பூரணை தினத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2015 | 7:50 am

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவிக்கின்றார்.

பெருந்திரளான மக்கள் இம்முறையும் பொசன் பூரணை தினத்திற்கு அனுராதபுரத்திற்கு வருகைதருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களை தடுப்பதற்கு உரிய முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள 11 நீர்த்தேக்கங்களில் உயிர்ப் பாதுகாப்புப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்காக 20 படகுகளும், 20 குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கொமான்டர் இந்திக்க டி சில்வா சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்