பெயரளவில் இயங்கும் மூதூர் வைத்தியசாலை: இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம்

பெயரளவில் இயங்கும் மூதூர் வைத்தியசாலை: இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 10:22 pm

திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி இன்று இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பட்டதாரிகள் சங்கம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அடிப்படை வசதிகளற்ற நிலையில் பெயரளவில் மாத்திரமே மூதூர் வைத்தியசாலை இயங்குவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

26 வைத்தியர்கள் தேவைப்படுகின்ற நிலையில் 9 வைத்தியர்களுடன் இந்த வைத்தியசாலை இயங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்