பங்குச் சந்தை மோசடி: தகவல்கள் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

பங்குச் சந்தை மோசடி: தகவல்கள் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 9:41 pm

கடந்தகாலப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான சகல தகவல்களையும், பிணையங்கள் மற்றும் பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதம நிறைவேற்றதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

கொழும்பு பங்குச் சந்தையின் 2014 ஆம் ஆண்டிற்கான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

கொழும்பு பங்குச் சந்தையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள் குறித்து இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதுதொடர்பாக பிணையங்கள் மற்றும் பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழுவின் வெளியக தொடர்பாடல்களுக்கான பணிப்பாளர் துஷார ஜயரத்னவிடம் நாம் வினவினோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் நிறைவடையும் வரை தகவல்களைத் தெரிவிக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் கொழும்பு பங்குச் சந்தையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுடன் தொடர்புடைய தகவல்கள் இதுவரை பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்