ஒற்றுமைப் பயணம் கொடக்கவெலயைச் சென்றடைந்தது

ஒற்றுமைப் பயணம் கொடக்கவெலயைச் சென்றடைந்தது

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 6:20 pm

78ஆவது நகரை அடையாளப்படுத்தும் வகையில், தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம், 26ஆவது நாளை பூர்த்தி செய்து, இன்று பிற்பகல் கொடக்கவெல நகரைச் சென்றடைந்தது.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கை சூரியவெவ பகுதியில் அதிகளவானோரின் வரவேற்புக்கு மத்தியில் இன்றைய பயணத்தை ஆரம்பித்திருந்தது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு பெருந்திரளான மக்கள் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சூரியவெவ மக்களின் ஆசிர்வாதத்தை அடுத்து, தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம் எம்பிலிபிட்டி நகரை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தது.

சர்வமத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் எம்பிலிப்பிட்டி மக்கள் ஒன்று திரண்டிருந்தனர்

நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் எம்பிலிப்பிட்டி நகரின் நாமம் பொறிக்கப்பட்ட அடையாளச் சின்னம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம் கொடக்கவெல நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.

சக்தி, சிரச, நியூஸ்பெஸ்ட், கொழும்பு துறைமுக நகர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தும் தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் 27ஆவது நாள் பயணம் நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

இரத்தினபுரி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் பயணத்தை ஆரம்பிக்கும் வாகனத் தொடரணி, முற்பகல் 11 மணிக்கு கலவானை நகர் மத்திக்குச் செல்லவுள்ளது.

அதனைத் தொடர்ந்து தெனியாய பஸ் நிலையத்திற்கு அருகில் வாகனத் தொடரணி பயணத்தை நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

532901_913522785374647_7552102540411105706_n 10346049_913524192041173_5585566006189075228_n 11027489_913524112041181_2858982382223485414_n 11063758_913515488708710_4194034524825627586_n 11392815_913524025374523_2583875985442875416_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்