இந்திய அணிக்கு இடைக்கால பயற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம்

இந்திய அணிக்கு இடைக்கால பயற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம்

இந்திய அணிக்கு இடைக்கால பயற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம்

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2015 | 12:57 pm

பங்களாதேஷுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் பயணத்தின் போது இந்திய அணிக்கு இடைக்கால பயற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது.
இந்திய அணி பங்களாதேஷில் வருகிற ஜுன் 7 ஆம் திகதி முதல் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டி வருகிற 10 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

மேலும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் முறையாக மூத்த பயிற்சியாளர் யாரும் இல்லாமல் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக ரவிசாஸ்திரி 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவராவார்.

ரவிசாஸ்திரி கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணியுடன் இயக்குனராக பங்களாதேஷ் சென்றார். அப்போது உலகக்கிண்ணத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பல் தனது பணியினை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து ரவிசாஸ்திரி இந்திய அணியுடன் இயக்குனராக பங்களாதேஷ் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்