அடிப்படை வசதிகளற்ற மீள்குடியேற்றம் மறுவாழ்வுக்குரிய தொடக்கமாகுமா?

அடிப்படை வசதிகளற்ற மீள்குடியேற்றம் மறுவாழ்வுக்குரிய தொடக்கமாகுமா?

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 8:41 pm

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, வீமன்காமம் கொலனி கிராமத்தில் வசித்து வருகிறார் 54 வயதான நடராசா.

25 வருடங்களுக்கு முன்னர் தமது பூர்வீக நிலத்தை விட்டு
வெளியேற்றப்பட்ட வலிகாமம் வடக்கு மக்களில் இவரும் ஒருவர்.

25 வருடங்களாக அகதி முகாம்களில் அவல வாழ்வு வாழ்ந்து வந்த இவர், தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது தனது வீடு எப்படியிருக்கும் என்ற பேராவலுடன் ஊர் திரும்பினார் நடரசா.

அழிக்கப்பட்டு உருக்குலைந்து போன வீட்டின் சிதைவுகள் மாத்திரமே எஞ்சியிருந்தன.

மீள்குடியேற்றத்தின்போது அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையினால் ஒரு அகதிக் கூடாரத்தைப் போல காட்சியளிக்கின்றது நடராசாவின் குடிசை.

மழை நாட்களில் அந்தக் குடிசையில் வாழ முடியாத நிலையில் அகதி முகாமிற்கே மீண்டும் சென்று தஞ்சம் புகுவுள்ளதாகக் கூறினார் நடராசா.

25 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்தவர்களின் பொருளாதார நிலைமை பின்தங்கியே இருக்கும்.

ஆதலின், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுவே மறுவாழ்வுக்குரிய நிறைவான தொடக்கமாக அமையும்…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்