அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 175 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்

அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 175 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்

அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 175 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2015 | 10:17 am

அரச நிர்வாக சேவைக்கு 175 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்து்ளது.

அதற்கான தகுதியானவர்களை தேர்தெடுப்பதற்கான நேர்காணல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே குறிப்பிட்டுள்ளார்.

அரச நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்திற்கான உத்தியோகஸ்தர்கள் தெரிவிற்காக,
கடந்த வருடம் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையில் பெற்றுகொள்ளப்பட்ட புள்ளிகளின்
அடிப்படையில் புதிய சேவையாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

தெரிவுசெய்யப்படும் உத்தியோகஸ்தர்கள், பயிற்சியின் பின்னர் வெற்றிடங்கள் காணப்படும் பிரதேசங்களுக்கு உள்வாங்கப்படுவுள்ளனர்.

மேலும் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு ஜூலை மாதமளவில் நியமனங்கள்
வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச நிர்வாகம் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்