வித்தியாவின் வீட்டாருக்கு அனுதாபம் தெரிவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு வீ.ஆனந்தசங்கரி பாராட்டு

வித்தியாவின் வீட்டாருக்கு அனுதாபம் தெரிவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு வீ.ஆனந்தசங்கரி பாராட்டு

வித்தியாவின் வீட்டாருக்கு அனுதாபம் தெரிவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு வீ.ஆனந்தசங்கரி பாராட்டு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 7:03 pm

சம்பிரதாயங்களை மீறி, தன் சார்பிலும் அரசு சார்பிலும் யாழ்ப்பாணம் சென்று வித்தியாவின் வீட்டாருக்கு அனுதாபம் தெரிவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை நாட்டு மக்கள் வெகுவாக பாராட்டுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களின் உதவியின்றி தன்னந்தனியாக யாழ்ப்பாணம் சென்று நேரில் அனுதாபம் தெரிவித்த ஜனாதிபதியின் நற்செயலை பாராட்டுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்தியா சிவலோகநாதன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டமை தமது காலத்தில் நடந்தேறிய மிகக் கொடூரமான செயல் என சுட்டிக்காட்டியுள்ள வீ.ஆனந்தசங்கரி, பாடசாலை மாணவர்கள் நாடளாவிய ரீதியில் கிளர்ந்தெழுந்து ஒற்றுமையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு பூராகவும் பரந்து வாழும் ஆண், பெண் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் வித்தியா மீது காட்டும் அனுதாபம் அவரை முழு இலங்கைக்கும் ஒற்றுமையின் சின்னமாக எடுத்துக்காட்டுவதாகக் கூறியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், அவரை ஒரு தியாகி என ஏற்றுக்கொண்டால்கூட மிகையாகாது என்றும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்