மஸ்கெலியாவில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு

மஸ்கெலியாவில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு

மஸ்கெலியாவில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

29 May, 2015 | 1:12 pm

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்படும் இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி காணாமல்போன சாமிமலை கிங்கோரா தோட்டப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞனே இன்று (29) காலை 8 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இளைஞனின் சடலம் தோட்டத்திலுள்ள நீர்நிலையொன்றிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதுடன், நீதவான் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த இளைஞனின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகளை சாமிமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்