புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2015 | 1:04 pm

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும்,பிரதி அமைச்சர் ஒருவரும்,இராஜாங்க அமைச்சர்கள் மூவரும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று (29) பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள பாராளுமன்ற விவகார அமைச்சராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

அரச நிர்வாக மற்றும் ஜனநாயக ஆட்சிக்கான இராஜாங்க அமைச்சராக பண்டு பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

வீடமைப்பு மற்றும் சமுர்தி இராஜாங்க அமைச்சராக ஹேமால் குணசேகர நியமிக்கப்பட்டதுடன் , காணி பிரதி அமைச்சராக சந்திரசிறி சூரியராச்சி ஜனாதிபதி முன்னிலையில் இன்று (29) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்