சேலஞ்சர் டீப் : பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

சேலஞ்சர் டீப் : பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

சேலஞ்சர் டீப் : பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 3:27 pm

பூமியை விட்டு பல இலட்சம் கிலோ மீட்டர் தொலைவு நோக்கிச் சென்று காலடி பதித்துவிட்ட மனிதனால், பூமியில் உள்ள ஓரிடத்திற்கு மட்டும் செல்லவே முடியவில்லை.

அந்த இடத்தின் பெயர் சேலஞ்சர் டீப் (Challenger Deep). இது உலகின் மிக ஆழமான கடற்பகுதி. கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. ஆனால், இங்கோ கிட்டத்தட்ட 11 கி.மீ.

எவரெஸ்ட்டை அப்படியே பெயர்த்து எடுத்து இந்த இடத்தில் போட்டாலும் 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும்.

கடல் நீரின் அழுத்தம் காரணமாகவே மனிதனால் இந்த இடத்திற்குச் செல்ல முடிவதில்லை.

காற்றுக்கும் அழுத்தம் உண்டு. அது எப்போதும் நம் உடலை அழுத்திக் கொண்டே இருக்கும். நமது உடலுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இருப்பதால் அந்த அழுத்தம் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை.

கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென்றால் இந்த அழுத்தம் 2 மடங்கு இருக்கும். அதுவே 20 மீட்டர் என்றால் 3 மடங்கு இருக்கும். 30 மீட்டர் ஆழத்தில் 4 மடங்கும், 4 கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கும் இருக்கும். இது நம்மை படுக்க வைத்து 50 சிமெண்ட் மூடைகளை மேலே அடுக்குவது போல் அழுத்தம் கொண்டது.

இதுவே 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு இருக்கும். அப்படியானால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவி செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து இருப்பதால் எதையும் பார்க்க முடியாது.

1960 இல் ‘டிரீயஸ்ட்’ என்ற நீர்மூழ்கிக் கலம் ஒன்று ‘சேலஞ்சர் டீப்’ ஆழம் வரை சென்றது. அதற்காக கனமான இரும்புக்கூண்டு ஒன்று தயாரிக்கப்பட்டது. அதனுள்ளே ‘ஜாக் பிக்கா’ என்ற கடல் ஆராய்ச்சி நிபுணரும், ‘வால்ஷ்’ என்ற கடற்படை அதிகாரியும் சென்றனர். அதில் இருந்த கனத்த கண்ணாடிச் சாளரம் வழியாக அவர்களால் அடிப்பகுதி நிலத்தை பார்க்க மட்டுமே முடிந்தது. அங்கு இறங்கி நிற்பது என்பது முடியாத ஒன்று என்பது புலனாகியது.

இதன் பின்னர் எந்த மனிதனும் அங்கு காலடி பதிக்க முடியாது என கண்டறியப்பட்டது.

data--design--may--challenger-deep_502918cb00ff0_w1500.png

 

57178865_challenger_deep_624

Marianatrenchmap


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்