சரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிக்கத் தீர்மானம்

சரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிக்கத் தீர்மானம்

சரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 7:53 pm

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு பதிலாக பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட ஜயந்த கெடகொடவை அகற்றுமாறு கோரி, சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா இந்த மனுவை தாக்கல்செய்திருந்தார்.

மனு மீதான விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதிகள் குழாமிலிருந்து புவனேக அலுவிகார தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக்கொண்டுள்ளார்.

மனுதாரரான சேனக ஹரிப்பிரிய டி சில்வா மனு தாக்கல் செய்வதற்கு சட்டரீதியாக முடியாது என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் விராஜ் தயாரத்ன அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்து சுட்டிக்காட்டினார்.

அடிப்படை ஆட்சேபனை குறித்து நீதிபதிகள் குழாமில் ஏனைய இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தமையால் மனு மீதான விசாரணையை முன்னெடுப்பதற்கு வேறு நீதிபதிகள் குழாத்தை நியமிக்கும்படி பிரதம நீதியசரிடம் கோருவதாக தீர்மானித்தனர்.

இதனடிப்படையில், வேறு ஒரு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அடுத்த மாதம் 15 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்