கொழும்பு நகர பாடசாலை மாணவர்களில் 25 வீதமானோர் நிறை குறைந்தவர்கள்

கொழும்பு நகர பாடசாலை மாணவர்களில் 25 வீதமானோர் நிறை குறைந்தவர்கள்

கொழும்பு நகர பாடசாலை மாணவர்களில் 25 வீதமானோர் நிறை குறைந்தவர்கள்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2015 | 11:34 am

தலைநகரிலுள்ள பாடசாலைகளில் 25 வீதமான மாணவர்கள் நிறை குறைந்தவர்கள் என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.

அத்துடன் நகர பாடசாலைகளில் 25 வீதமானோர் உடற்பருமன் கொண்டவர்கள் என்றும் கொழும்பு பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி குறிப்பிடுகின்றார்.

தவறான உணவுப் பழக்கவழக்கங்களே பிள்ளைகளின் நிறையில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதவிர பாடசாலைகளின் சிற்றுண்டிச் சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளில் அதிக கொழுப்புச் சத்து, சீனி மற்றும் உப்பு காணப்படுகின்றமையும் மாணவர்களின் உடல் நிறையில் தாக்கம் செலுத்துவதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிட்டுள்ளது.

சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு நகரிலுள்ள சுமார் 125 அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் சிற்றுண்டிச் சாலைகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்