குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2015 | 10:01 am

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 இற்கும் அதிகமான வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

50,000 வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலங்சூரிய குறிப்பிடுகின்றார்.

வருட இறுதிக்குள் 50,000 வீடுகளை நிர்மாணித்து முடிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வீடுகளுக்கான 50,000 பயனாளிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இவர்களின் 25,000 குடும்பங்கள் வீடுகளை நிர்மாணிப்பதற்கான முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்