கஹவத்தை இரட்டைக் கொலை: சாட்சியங்களை உறுதிசெய்ய முடியாது போனதாக பொலிஸார் தெரிவிப்பு

கஹவத்தை இரட்டைக் கொலை: சாட்சியங்களை உறுதிசெய்ய முடியாது போனதாக பொலிஸார் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 9:57 pm

கஹவத்தை கொடகெத்தன இரட்டைக் கொலை தொடர்பில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்சென்று சாட்சியங்களை உறுதிசெய்ய முடியாது போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸார் இதனைக் குறிப்பிட்டனர்.

2012 ஆம் ஆண்டு கஹவத்தை கொடகெத்தன பகுதியில் தாய் மற்றும் மகளைக் கொலைசெய்த சம்பவத்தின் மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து கொட்டகெத்தன பகுதி மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

கஹவத்தை நகருக்கு வந்து ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டபோது, பொலிஸார் மீது பொது மக்கள் கற்பிரயோகம் நடத்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்