ஒற்றுமைப் பயணம் பிபிலையை அடைந்தது

ஒற்றுமைப் பயணம் பிபிலையை அடைந்தது

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 8:07 pm

இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம், 66ஆவது பயணத் தரிப்பிடமான பிபிலையை இன்று சென்றடைந்தது.

மக்களின் அமோக வரவேற்பிற்கு மத்தியில் தேசத்தை ஒன்றிணைக்கும் வாகனத் தொடரணியின் 22 ஆவது நாள் பயணம் பண்டாரவளையில் இன்று ஆரம்பமானது.

இன, மத, ஜாதி, வர்க்க பேதங்களை மறந்து மக்கள் இன்றும் அணிதிரண்டனர்.

நேற்றைய பயணத்தின் இறுதி அம்சமாகவும் இன்றைய பயணத்தின் ஆரம்பமாகவும் முத்தாய்ப்பாகவும் பண்டாரவளையில் நேற்றிரவு இசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.

பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த வாகனத் தொடரணியை வீதியின் இருமருங்கிலும் குழுமியிருந்த மக்கள் தேசியக் கொடிகளை அசைத்து வரவேற்றனர்.

பிபிலையை அடைந்த பேரணிக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கினர்.

சிரச, சக்தி, நியூஸ்பெஸ்ட், கொழும்பு துறைமுக நகரம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம் நாளை மொனராகலையில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

நாளை முற்பகல் 11 மணிக்கு புத்தலவை சென்றடையவுள்ள வாகனத் தொடரணி வெல்லவாயவில் தனது பயணத்தை நிறைவு செய்யவுள்ளது.

 

11055370_910959922297600_5643695633140231361_n 11230907_910960058964253_2044336603544385239_n 11295729_910959765630949_4267870114533184906_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்