உரிமை சார்ந்த விடயங்கள் தீர்க்கப்படுமாயின் கையேந்தவேண்டிய நிலை இராது – வினோநோதராதலிங்கம்

உரிமை சார்ந்த விடயங்கள் தீர்க்கப்படுமாயின் கையேந்தவேண்டிய நிலை இராது – வினோநோதராதலிங்கம்

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 10:27 pm

தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்கள் தீர்க்கப்படுமாயின் அரசாங்கத்திடம் கையேந்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நன்னீர் மீன்பிடியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் மீன்பிடி உபகரணங்களை வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினரின் தலைமையில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் அவர் தெரிவித்ததாவது;

[quote]நாட்டில் எங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் நாங்கள் அரசாங்கத்திடம் கையேந்த வேண்டிய நிலை வராது. முள்ளிவாய்க்காலில் அரசாங்கத்திடம் கையேந்த வேண்டிய நிலையை அரசாங்கம் உருவாக்கியது. மெனிக் பாமுக்கு போனபோது அரசாங்கத்திடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது பிரச்சினைகள் இனங்கண்டு தீர்க்கப்படாமல் இருப்பதால் தொடர்ந்தும் அரசாங்கத்திடம் கையேந்த வேண்டிய நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்தும் நாங்கள் இதற்கு இடமளிக்க முடியாது. நாங்கள் எங்களுடைய சொந்தக் காலில் நிற்பதற்கு எங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்