இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் ஜே. ஶ்ரீரங்கா உள்ளிட்ட மூவர் பங்கேற்பு

இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் ஜே. ஶ்ரீரங்கா உள்ளிட்ட மூவர் பங்கேற்பு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 9:51 pm

இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றது.

அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் இலங்கை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்கா உள்ளிட்ட மூவர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 27 ஆம் திகதி டோக்கியோவில் ஆரம்பமான இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாடு நாளையுடன் நிறைவடைகின்றது.

68 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 180 இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் இலங்கை சார்பில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே ஸ்ரீரங்கா, பாராளுமன்ற உறுப்பினர் உதித்த லொகு பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் நலின்பண்டார ஜயமஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஜப்பான் பாராளுமன்ற சபாநாயகர் ததமோரி ஒஷீமாவை பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா சந்தித்து கலந்துரையாடிள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு கடனற்ற நிதியுதவிகளை வழங்கும் அதேநேரம் மலையகம் மற்றும் வடக்கு கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்திகளுக்கு கடனற்ற நிதியுதவி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா, ஜப்பான் பாராளுமன்ற சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்