இந்தியாவில் சட்டவிரோதமான முறையில்  தங்கக் கட்டிகளை வைத்திருந்த  இலங்கைப்  பிரஜை கைது

 இந்தியாவில் சட்டவிரோதமான முறையில்  தங்கக் கட்டிகளை வைத்திருந்த  இலங்கைப்  பிரஜை கைது

 இந்தியாவில் சட்டவிரோதமான முறையில்  தங்கக் கட்டிகளை வைத்திருந்த  இலங்கைப்  பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

29 May, 2015 | 11:47 am

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஒருகிலோகிராம் தங்கத்துடன் இலங்கை பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தின், அஹமதாபாத் விமான நிலையத்திலேயே இலங்கையர் கைதுசெய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

புதுடில்லியில் இருந்து அஹமதாபாத் நோக்கி உள்ளூர் பயணியாக அவர் பயணம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான இலங்கையர் தனது உடலில் ஒருகிலோகிராம் நிறையுடைய பத்து தங்கக் கட்டிகளை மறைத்து கொண்டுசென்றதுடன், இந்திய நாணயப்படி அதன் பெறுமதி 27 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பேரில் இலங்கைப் பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்