ஆமைகளை விற்க முயன்ற மூவர் கைது

ஆமைகளை விற்க முயன்ற மூவர் கைது

ஆமைகளை விற்க முயன்ற மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

29 May, 2015 | 10:33 am

மூன்று  ஆமைகளை விற்க முயன்ற மூவர் முந்தல் நாவிதன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, முதலாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் தலா 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இரண்டாவது சந்தேகநபர் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட ஆமைகளை தப்போவ பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்