முல்லேரியாவில் சுற்றிவளைப்பு: துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

முல்லேரியாவில் சுற்றிவளைப்பு: துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

எழுத்தாளர் Bella Dalima

27 May, 2015 | 9:41 pm

முல்லேரியாவில் கலால் திணைக்கள அதிகாரிகள் நேற்று (26) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கை தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றைக் கலால் திணைக்கள அதிகாரிகள் நேற்று சுற்றிவளைத்தனர்.

இதன்போது வீட்டினை சோதனையிட்ட அதிகாரிகள் T56 ரக துப்பாக்கியொன்றையும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியொன்றையும் கைப்பற்றினர்.

T56 ரக துப்பாக்கிக்குக் பயன்படுத்தப்படும் 30 ரவைகளும் 9 மில்லிமீற்றர் ரக 6 துப்பாக்கி ரவைகளும் கிடைத்துள்ளன.

அத்துடன், இரண்டு வாள்களும் கலால் திணைக்கள அதிகாரிகளினால் அந்த வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த நால்வர் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அவர்கள் முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சில குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவரும் சந்தேகநபர்களில் உள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஒரு சந்தேகநபர் வேறு பிரதேசத்தில் இருந்து குற்ற வழக்கொன்றில் ஆஜராகுவதற்காக முல்லேரியாவிற்கு வருகை தந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்