டிரான் அலஸை கைது செய்யாமல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

டிரான் அலஸை கைது செய்யாமல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

27 May, 2015 | 12:59 pm

பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை கைதுசெய்யாமல், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை கருத்திற்கொண்டு, பிரதம நீதியரசர் கே ஸ்ரீபவன், உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர, ரோஹினி மாறசிங்க உட்பட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் பிரதிவாதிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு ஜூன் மாதம் 11 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவர் விளக்கமளிக்க வேண்டியிருந்தால், ஜூன் மாதம் 11 ஆம் திகதி சத்தியக் கடதாசி மூலம் அதனை அறிவிக்க முடியுமென நீதிமன்றத்தில் இன்று சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.

டிரான் அலஸூக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தமது தரப்புக்கு எவ்வித தொடர்பும் இல்லையென அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்