சமூக சேவை உத்தியோகத்தர் சுட்டுக் கொலை: விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

சமூக சேவை உத்தியோகத்தர் சுட்டுக் கொலை: விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

சமூக சேவை உத்தியோகத்தர் சுட்டுக் கொலை: விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

27 May, 2015 | 5:35 pm

மட்டக்களப்பு – வெள்ளாவெளி, மண்டூர் பகுதியில் இடம்பெற்ற சமூக சேவை உத்தியோகத்தரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

மட்டக்களப்பு – வெள்ளாவெளி, மண்டூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் 42 வயதான சமூக சேவை உத்தியோகத்தர் நேற்று (26) சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேவேளை, நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு வலியுறுத்தும் சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்