குடும்பத்தாரின் அனுமதியுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்

குடும்பத்தாரின் அனுமதியுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்

குடும்பத்தாரின் அனுமதியுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்

எழுத்தாளர் Bella Dalima

27 May, 2015 | 4:16 pm

இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி, 3 மகள்களிடம் தெரிவித்து விட்டு, அவர்களது அனுமதியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள லங்காஷயரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெப்ரி ஸ்பெக்டருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

அவர் முதுகு வலியால் அவதிப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வலி அதிகரிக்கவே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது முதுகு எலும்பில் கட்டி உள்ளது என்றும் அது நாளுக்கு நாள் வளரக்கூடும் என்றும் அது வளரத் துவங்கினால் அவரின் உடல் கழுத்திற்கு கீழ் செயற்படாது என்றும் தெரிவித்தனர்.

கடந்த 6 ஆண்டுகளாக வலியுடன் வாழ்ந்து வந்த அவரின் நிலைமை மோசமாகத் தொடங்கியது. ஓடியாடி உழைத்து வந்த ஜெப்ரிக்கு, உடல் செயலிழந்து ஒரு இடத்தில் முடங்குவது, பிறரை நம்பி வாழ்வது பிடிக்கவில்லை.

இதையடுத்து அவர் கை, கால்கள் நன்றாக இருக்கும்போதே தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரில் உள்ள டிக்னிடாஸ் அமைப்பின் மருத்துவமனையில் சேர்ந்து, அங்கே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த மருத்துவமனையில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படுபவர்கள் தற்கொலை செய்துகொள்ள கருணை அடிப்படையில் உதவி வழங்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்