இன்புளுயன்சா AH1N1 வைரஸ் தொற்று பரவும் அபாயம்

இன்புளுயன்சா AH1N1 வைரஸ் தொற்று பரவும் அபாயம்

எழுத்தாளர் Bella Dalima

27 May, 2015 | 6:09 pm

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்புளுயன்சா AH1N1 வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இன்புளுயன்சா AH1N1 வைரஸ் தொற்று நரம்புக்கட்டமைப்புக்களில் ஏற்படுவதுடன், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டைக்கரகரப்பு, இருமல் என்பன இந்நோய்த் தொற்றின் அறிகுறிகளாகும்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 143 பேர் இன்பளுயன்சா AH1N1 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 07 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது.

கர்ப்பிணித் தாய்மார், இரண்டு வயதிற்குட்பட்ட சிறார்கள், 65 வயதிற்கும் அதிகமானவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்புளுயன்சா AH1N1 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்