ஹட்டன் கல்வி வலயத்தின் புதிய ஆய்வுக் கூடங்களின் திறப்பு விழாக்களை பிற்போடுமாறு அறிவுறுத்தல்

ஹட்டன் கல்வி வலயத்தின் புதிய ஆய்வுக் கூடங்களின் திறப்பு விழாக்களை பிற்போடுமாறு அறிவுறுத்தல்

ஹட்டன் கல்வி வலயத்தின் புதிய ஆய்வுக் கூடங்களின் திறப்பு விழாக்களை பிற்போடுமாறு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 7:22 am

ஹட்டன் கல்வி வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களின் திறப்பு விழாக்களை மறு அறிவித்தல் வரை பிற்போடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ரி.இராஜசேகரம் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள ஐந்து தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் இரண்டு சிங்கள மொழிமூல பாடசாலைகளிலும் புதிதாக தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக் கூடங்களை இன்று திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்