வித்யா கொலைச்சம்பவம் மிகவும் கொடூரமானது – அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர்

வித்யா கொலைச்சம்பவம் மிகவும் கொடூரமானது – அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 7:52 pm

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி வித்யா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஶ்ரீ அத்ததஸ்சி தேரர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் இவர் மேலும் தெரிவித்ததாவது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அத்துடன் 18 வயதான ஒரு பெண்ணுக்கு இவ்வாறு நடந்துள்ளமையானது மிலேச்சத்தனமானது.

இவ்வாறு மிலேச்சத்தனமானவர்கள் இந்த சமூகத்தில் உள்ளார்கள் என்பதால், அனைத்து மதத் தலைவர்களும் அவர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு போதிக்க வேண்டும். அனைவருடனும் ஒற்றுமையாகவும், எவ்வித பேதங்களும் இல்லாமலும் வாழ வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.

எதிர்கால இலங்கையில் அனைத்து இனத்தவர்களும், ஒத்துழைப்புடன், சமாதானத்துடன் செயற்படும் வகையில் இறைவனின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்