மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து 1600 குடும்பங்களை அகற்றத் தீர்மானம்

மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து 1600 குடும்பங்களை அகற்றத் தீர்மானம்

மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து 1600 குடும்பங்களை அகற்றத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 8:40 am

பதுளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து 1,600 குடும்பங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

மண் சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் மண் சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார கூறியுள்ளார்

அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து பதுளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மக்களின் முறையற்ற செயற்பாடுகளே அநேகமான பகுதிகளில் மண் சரிவு அபாயம் ஏற்படக் காரணம் என நிலையத்தின் மண் சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து ஆயிரத்து 600 குடும்பங்களை அகற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்