மட்டக்களப்பு மண்டூரில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மண்டூரில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மண்டூரில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 1:35 pm

மட்டக்களப்பு வெள்ளாவெளி மண்டூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

வீட்டில் இருந்தவர்மீதே இன்று முற்பகல் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது

சந்தேகபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்