நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 12:55 pm

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 40,000 சுகாதார ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை சுவசேவா சங்கம் தெரிவித்துள்ளது.

30 பதவி நிலைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சமந்தகோரலேஆரச்சி கூறியுள்ளார்.

சுகாதார ஊழியர்களின் 10 அம்சக் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காமையே பணிப்பகிஷ்கரிப்பிற்கான காரணமாகும்.

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருவதாக அகில இலங்கை சுவசேவா சங்கம் தெரிவித்துள்ளது.

தேவை ஏற்பட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் ஒத்துழைப்பு வழங்குவதாக சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த பணி பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி்யுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்