சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 12:58 pm

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

புங்குடுதீவில் மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சுன்னாகம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று முதல் 14 நாட்களுக்கு சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தடைவித்து உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்