கெலிஓயா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்

கெலிஓயா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்

கெலிஓயா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 4:41 pm

பேராதனை கெலிஓயா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

நகைக் கடையில் கொள்ளையிடுவதற்காக இன்று (26) பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகைதந்த சிலர், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

கொள்ளையர்கள் இருவரும் நகைக் கடைக்குள் நுழைந்து, நகைகளை கொள்ளையிட்டமையை வெளியிலிருந்த ஒருவர் அதனை வீடியோ பதிவுசெய்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, தப்பிச்செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.

இதன்போது, கொள்ளையர்களை பிடிப்பதற்கு முயற்சித்தவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் நால்வர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்