ஒற்றுமைப் பயணம் 57 ஆவது நகரத்தின் நினைவுகளை மாவனெல்லையில் பதிவுசெய்தது

ஒற்றுமைப் பயணம் 57 ஆவது நகரத்தின் நினைவுகளை மாவனெல்லையில் பதிவுசெய்தது

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 9:02 pm

கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் மக்களின் உள்ளங்களை இணைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசத்தை இணைக்கும் ஒற்றுமைப்பயணம் 57 ஆவது நகரத்தின் நினைவுகளை பதிவு செய்துகொண்டு இன்று மாவனெல்ல நகரை வந்தடைந்தது.

ஒவ்வொரு தலைமுறைக்கும் சகவாழ்வை எடுத்துக் கூறும் வகையில் கிராமங்கள் தோறும் பயணிக்கும் ரன்பூமி வாகனத் தொடரணி இன்றைய நிகழ்வுகளை கலகெதரவில் ஆரம்பித்தது.

வாகனத் தொடரணியை வரவேற்கும் வகையில் பேன்ட் வாத்தியக் குழுவை முன்னிலைப்படுத்தி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சகவாழ்வின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு சகல இன மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கலகெதர மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

தேசத்தின் ஒற்ற்றுமைப் பயணம் மக்கள் ஆசிர் வாதத்துடன் கலகெதரவிலிருந்து ரம்புக்கனை ​நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

சக்தி, சிரச, நியூஸ்பெஸ்ட், கொழும்பு துறைமுக நகர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம் 57 ஆவது நகரத்தை பதிவு செய்துகொண்டு ரம்புக்கனையை சென்றடைந்தது.

சகவாழ்வு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பை வழங்கும் நோக்கில் ரம்புக்கனை மக்கள் தேசத்தை ஒன்றிணைக்கும் பயணத்தில் இணைந்துகொண்டனர்.

தேசத்தை ஒன்றிணைக்கும் வாகனத்தொடரனி மக்கள் ஆசிர்வாதத்திற்கு மத்தியில் இன்றைய பயணத்தை மாவனெல்லையில் நிறைவு செய்துகொண்டது.

ஒற்றுமையை வளர்க்க ​வேண்டும் என்ற நோக்கில் மாவனெல்லை வாழ் மக்கள் வாகனத் தொடரணியுடன் இணைந்துகொண்டனர்.

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம் கிராமங்களை கடந்து நாளை (27) கம்பளையில் ஆரம்பமாகவுள்ளது.

நாளை (27) 11 மணியளவில் நாவலபிட்டிய நகரைக் கடந்து கினிகத்தேன நகரில் நாளைய பயணம் நிறைவடையவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]wsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்