தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்திற்கு மகாநாயக்கத் தேரர்கள் ஆசி

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்திற்கு மகாநாயக்கத் தேரர்கள் ஆசி

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்திற்கு மகாநாயக்கத் தேரர்கள் ஆசி

எழுத்தாளர் Staff Writer

25 May, 2015 | 9:31 pm

தேசிய ஒன்றுமையை ஏற்படுத்துவதற்காக எம்.ரி.வி/எம்.பி.சி ஊடக வலையமைப்பு தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமை பயணத்தின் ஊடாக மேற்கொள்ளும் முயற்சிக்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் இன்று ஆசி வழங்கினர்.

ஒற்றுமை பயணத்தின் வாகனத் தொடரணி இன்று கண்டியை சென்றடைந்தபோது இந்த நடவடிக்கை தொடர்பில் எம்.ரி.வி. எம்.பி.சி ஊடக வலையமைப்பின் அதிகாரிகள் மகாநாயக்கத் தேரர்களுக்கு விளக்கமளித்தனர்

இந்த ஒற்றுமை பயணத்தினால் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் ஒற்றுமை ஏற்படும் என்பதால் அது வரவேற்றகத் தக்கது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பதாக தெரிவித்த மகாநாயக்கத் தேரர் ஒற்றுமையின் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை. இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒரே நாட்டின் பிரஜைகளாக வாழ வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்சி தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமை பயணம் மிகவும் சிறந்த முயற்சி எனவும் மகாநாயக்கர் தேரர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்