பிரித்தானியாவில் இலங்கைப் பிரஜைக்கு 4 வருட சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் இலங்கைப் பிரஜைக்கு 4 வருட சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் இலங்கைப் பிரஜைக்கு 4 வருட சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

24 May, 2015 | 1:32 pm

கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான வேன் சாரதியொருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 4 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

வாரத்தில் ஏழு நாட்களும் 12 மணித்தியால இரவுநேரப் பணியில் ஈடுபட்டிருந்த போது குறித்த இலங்கையர் செலுத்திய வேன் வீதியை விட்டு விலகி பெண் ஒருவர் மீது மோதியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் சாரதி மிகவும் களைப்படைந்தமையே விபத்திற்கு காரணம் என பிரித்தானியாவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துக்களில் 20 வீதமானவை தூக்கமின்மை காரணமாக இடம்பெறுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்