கொழும்பில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய மூவர் கைது

கொழும்பில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய மூவர் கைது

கொழும்பில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 May, 2015 | 1:42 pm

கொழும்பின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை மற்றும் ஆட்டுப்பட்டித்தெரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் போதைப் பொருளை கடத்திய சந்தேகநபர் ஒருவர் வெள்ளவத்தை கடற்கரை வீதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த 37 வயதான குறித்த சந்தேகநபரிடம் இருந்து 50 கிராம் ஹொரோய்ன் போதைப் பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேவேளை ஜிந்துப்பிட்டியின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைளைப்பில் 30 கிராம் ஹொரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மற்றும் புசல்லாவை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்