இலங்கையில் சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி முறைமையை ஏற்படுத்த வேண்டும் – பிரதமர்

இலங்கையில் சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி முறைமையை ஏற்படுத்த வேண்டும் – பிரதமர்

இலங்கையில் சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி முறைமையை ஏற்படுத்த வேண்டும் – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2015 | 9:24 am

இலங்கையில் சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி முறைமையை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (23) நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இளைஞர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்

மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சு, இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

1983 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் மே மாதம் 23 ஆம் திகதி தேசிய இளைஞர் தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 1,500 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்